சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் 208 ரன்களை இந்திய அணி அடித்தாலும் பௌலர்கள் சரியாக செயல்படாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அதிலும் அனுபவ பௌளரான புவனேஷ்வர் குமார் சுமாராக பந்துவீசியது கடும் விமர்சனத்திற்கு உண்டானது. இந்நிலையில் இதற்கு கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மொஹாலியில் நேற்று எந்தவித பனிப்பொழிவும் இல்லை. எனவே பவுலர்களுக்கு சரியான சூழல் இல்லை என்று காரணம் கூற முடியாது.
இந்திய அணிக்கு 19ஆவது ஓவர்தான் தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதுவும் புவி தான் அதனை செய்கிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் புவனேஷ்வர் குமார், ஒவ்வொரு முறையும் 19வது ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார். கடைசியாக நடைபெற்ற 3 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் 19வது ஓவரில் மொத்தம் 18 பந்துகளில் 49 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

அதாவது ஒரு பந்திற்கு 3 ரன்கள் வீதம் விட்டுக்கொடுக்கிறார். புவியின் அனுபவத்திற்கு இது மிகவும் அதிகம். எனவே மாற்றிக்கொள்ள வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த போட்டியில் அனைவரது பார்வையும் புவனேஸ்வர் குமாரின் மீது திரும்பியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.