இந்திய அணி T20 உலகக்கோப்பைக்காக தயாராகிக்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அணியில் பந்தை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், தினேஷ் கார்த்திக் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகிறார். ஆனால் ரிஷப் பண்ட் ஆடும் லெவனில் இருப்பது எக்ஸ் ஃபேக்டரை அளிக்கும். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவர் அணியில் இருப்பது அவசியம்.
2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய 2 தொடர்களிலும் கௌதம் கம்பீர் எப்படி ஆடினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல யுவராஜ் சிங்.. யுவராஜ் சிங் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்திருக்கிறார்.

2011 உலக கோப்பையிலும் யுவராஜ் சிங் அபாரமான பங்களிப்பை செய்தார். இடது கை பேட்ஸ்மேன் அணியில் இருப்பது பெரிய பலம். ரிஷப் பண்ட்டுக்கு முதல் பந்திலிருந்தே சிக்ஸர் எப்படி அடிப்பது என்று தெரியும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அசத்திவிடுவார் என்று ரெய்னா கூறியிருக்கிறார்.