Skygain News

பை பை சொன்ன சுரேஷ் ரெய்னா ..சோகத்தில் ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐ.பி.எல் தொடரின் நட்சத்திர ஆட்டக்காரருமான சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஐ.பி.எல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தோனியுடன் சேர்ந்து தன் ஓய்வை அறிவித்த ரெய்னா தற்போது ஐ.பி.எல் தொடரிலிருந்து தன் ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஏலத்தின் போது 2வது சுற்றில் கூட சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை. அவரின் ஃபார்ம் சரியில்லை எனக்கூறி மற்ற எந்த அணிகளும் அவரை வாங்காததால், கடந்த ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.

எனினும் சமீபத்தில் அவரின் பயிற்சி வீடியோ வெளியானதால் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பதற்காக தயாராகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் தொடர் உட்பட இந்தியாவின் அனைத்து உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், எனது முடிவை உத்தரபிரதேச வாரியத்திற்கும் பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷாவுக்கும் தெரிவித்துவிட்டேன். தற்போது அயல்நாட்டு தொடர்களில் விளையாட எனக்கு முழு சுதந்திரமும் உள்ளது எனக் கூறினார்.ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஜாம்பவானாக ரெய்னா திகழ்கிறார்.

இதுவரை ஐபிஎல் தொடரில் 200 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரெய்னா 5,528 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார் .இந்நிலையில் அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் csk அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More