சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஷ் ஜோர்டன், பகத் வர்மா, கேஎம் ஆசிப், நாராயண் ஜெகதீசன் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. லட்டு கேட்ச்களை கூட பிடிக்க முடியாமல் வீரர்கள் திணறியது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பீல்டிங் சொதப்பல் காரணமாகவும் சில போட்டிகளில் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், பீல்டிங்கில் இந்த குறையை போக்க சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவில் சேர்க்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாகவும், தோனியும் இந்த முடிவுக்கு ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.