சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது சூர்யா 42. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் 11ம் நூற்றாண்டின் பின்னணியிலும் தற்போதைய காலகட்டத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
தற்போது படத்தின் மூன்றாவது கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.டியில் உருவாகவுள்ள இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இந்திய அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக படத்தின் சூட்டிங்கில் சூர்யா மற்றும் யோகிபாபு இணைந்த காட்சிகள் சென்னை ஈசிஆரில் எடுக்கப்பட்டன. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை தொடர்ந்து அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை பொங்கலையொட்டி படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.