Skygain News

சூர்யா 42 படக்குழு வெளியிட்ட பரபரப்பான அறிக்கை..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சூர்யா தற்போது பாலாவின் வணங்கான் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சிவா. இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் தான் சூர்யா இணைந்துள்ளார்.

சிவா படத்தில் சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இந்நிலையில் இந்தப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் 3டி-யில் உருவாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார்.

மேலும் சுமார் 10 மொழிகளில் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ‘சூர்யா 42’ படக்குழு சார்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்’ என்று தலைப்பிட்டு, “எங்கள் தயாரிப்பான #Suriya42 இன் படப்பிடிப்புத் தளங்களில் இருந்து சிலர் ‘வீடியோக்கள் மற்றும் படங்களை’ பகிர்வதை நாங்கள் கவனித்தோம்.

ஒவ்வொரு வேலையும் முழு குழுவின் இரத்தத்தையும் வியர்வையும் உள்ளடக்கியது. இந்தப் படத்தை அனைவருக்கும் பிரமாண்டமான திரையரங்க அனுபவமாகப் பரிசளிக்க விரும்புகிறோம்”.மேலும் இப்படி வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களை நீங்கள் நீக்கினால்/அகற்றினால் அது பெரும் உதவியாக இருக்கும், மேலும் எதிர்காலத்தில் அதைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து அவ்வாறு பகிர்பவர்கள் மீது ‘பதிப்புரிமை மீறல்’ கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.