சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் 3டி-யில் உருவாகவுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் இந்தப்படத்தின் ஜானர் குறித்து பேசிய படத்தொகுப்பாளர் நிஷாந்த் யூசுப் இது ஃபேண்டஸி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆயிரம் வருடத்திற்கு முன்பும் தற்போதைய காலகட்டத்திற்கும் ஏற்றது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.