கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது வணங்கான் படம் தான். இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாலா. சூர்யாவைப்போல் இப்படத்தை தயாரித்து வந்த சூர்யாவின் 2டி நிறுவனமும் இப்படத்தில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துவிட்டது.
வணங்கான் படத்தில் சூர்யா நடித்த காட்சிகளை கிட்டத்தட்ட ஒருமாதம் படமாக்கினார் பாலா. கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஷூட்டிங் நடந்த போதெல்லாம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் எந்தவித தாமதமும் இன்றி சம்பளத்தை வழங்கி வந்ததாம் சூர்யாவின் 2டி நிறுவனம்.
இந்நிலையில், வணங்கான் படத்துக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் செலவு செய்த தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ.10 கோடியை அந்நிறுவனம் செல்வு செய்ததாம்.

தற்போது படத்தில் இருந்து சூர்யாவே விலகி விட்டதால் அந்த 10 கோடி ரூபாயும் வேஸ்டாக போனதாக கூறப்படுகிறது. பாலாவை நம்பி போட்ட பணம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.