தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் பிசியாக நடித்து வருகின்றார்.இந்நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாரான மம்முட்டியுடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.
71 வயது நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக முதல் முறையாக ஜோதிகா நடிக்க உள்ளார். இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜோதிகா பிறந்தநாளன்று வெளியானது. இந்தப்படத்தை மம்முட்டியின் சொந்த கம்பெனி தயாரிக்கின்றது. இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது.
Actor @Suriya_offl – @mammukka and #Jyothika from the shooting spot of #Kaathal.#Mammukka #Suriya pic.twitter.com/xyXA4mUkeQ
— Sreedhar Sri (@SreedharSri4u) November 9, 2022
இந்நிலையில் காதல் – தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா திடீர் விசிட் அடித்துள்ளார். அப்போது நடிகர் மம்முட்டியுடன் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து உணவு சப்பிட்டுள்ளனர். தற்போது இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.