தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் ஜெய் பீம். நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. த.செ.ஞானவேல் இயக்கிய இப்படத்தில் சூர்யா உடன் மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளை வென்று குவித்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் த.செ.ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.

அவரிடம் சூர்யாவின் சிங்கம் படத்தை போல் ஜெய் பீம் படமும் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஞானவேல், ஜெய்பீம் படக்கதையை போல் நீதிபதி சந்துரு ஆஜரான வழக்குகள் நிறைய இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக ஜெய்பீம் இரண்டாம் பாகமாக எடுப்போம். சூர்யாவும் அதில் நடிப்பார்” என இயக்குனர் ஞானவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.