Skygain News

மீண்டும் வெற்றி இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா..தரமான சம்பவம் இருக்கு போலயே..!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா சமூக நலன் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்‌. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம்.

இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக உருவான இப்படத்தை டிஜே ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில் இந்தபடத்தின் வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேலின் படத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ‘

ஜெய் பீம்’ போன்று சமூக நலன் சார்ந்து உருவாக உள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர பாலாவுடன் ‘வணங்கான்’ படத்தை சூர்யா கைவசம் வைத்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More