சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் வரவேற்பையும், சர்ச்சையையும் பெற, இவர் நடித்த சூரரைப்போற்று படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து கமலின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் சூர்யா.
என்னதான் ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் சூர்யாவை ரசிகர்கள் திரையில் கொண்டாடினர். இந்நிலையில் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்றைய தினம் நடைபெற்றது.இதில் சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
இதனிடையே விக்ரம் படத்தின் அடுத்த பாகம் குறித்து சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர், இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் படம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக பண்ணிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

விக்ரம் படத்தில் அவரது ரோலக்ஸ் கேரக்டர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யாவின் இந்த பதில் கவனத்தை பெற்றுள்ளது.மேலும் சூர்யா இந்த விருது வழங்கும் விழாவில் ஜெய் பீம் மற்றும் சூரரைப்போற்று படத்தைப்பற்றியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது