சூர்யா மற்றும் பாலா இணைவதாக வந்த செய்தியிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. நந்தா படத்தில் இணைந்த இக்கூட்டணி அதைத்தொடர்ந்து பிதமாகன் படத்திலும் இணைந்து பணியாற்றியது. சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் என்பதால் இவர்கள் முன்றாவது முறையாக இணைக்கின்றனர் என்றவுடன் ரசிகர்கள் ஆவலாக வணங்கான் படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தை சூர்யாவே தயாரிக்க ஜோதிகா மற்றும் க்ரிதி ஷெட்டி நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றனர். இதையடுத்து வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது சூர்யா படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியதாகவும், சூர்யாவிற்கும் பாலாவிற்கும் பிரச்சனை என்றும் சமூகத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது..

இதையடுத்து இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இருப்பினும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கப்படாமலே இருந்தது சூர்யா ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களின் குழப்பத்தை போக்கியுள்ளார்.
அதாவது வணங்கான் படத்தின் பாடல் பதிவு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இப்படம் கைவிடப்படவில்லை என்ற நிம்மதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
#vanangaan songs recording on progress 🔥🔥🔥 … @Suriya_offl @rajsekarpandian #directorbala
— G.V.Prakash Kumar (@gvprakash) September 11, 2022