சூர்யா தற்போது சிவாவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். சூர்யா 42 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கின்றார் சூர்யா.
இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட வணங்கான் படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சூர்யா மற்றும் பாலா இடையே பிரச்சனையின் காரணமாக இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் சூர்யா தரப்பிலிருந்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வதந்தி சமூகத்தளங்களில் பரவி வருகின்றது.

அதாவது சூர்யாவின் வணங்கான் திரைப்படம் நேரடியாக OTT யில் வெளியாவதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இதனை ஒரு விநோயோகஸ்தர் மறுத்துள்ளார். சூர்யா மற்றும் பாலா கூட்டணியில் உருவாகும் வணங்கான் திரைப்படம் கண்டிப்பாக திரையில் தான் வெளியாகும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.