இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்காவிற்கு எதிரான தொடரை கைப்பற்றியது. அதன் காரணமாக நம்பிகையுடன் T20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகனாக தேர்வானார். நேற்றைய போட்டியில் சூர்யகுமார் சொதப்பியிருந்தாலும், அவரின் தொடர் அதிரடி ஆட்டம் இந்தியாவை பல போட்டிகளில் காப்பாற்றியிருக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் , தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய இன்னும் சில ஓவர்கள் கிடைக்க வேண்டும். நேற்று அவர் விளையாடியதை பார்க்கும்போது, நம்பர் 4 வீரருக்கான எனது இடம் குறித்து எனக்கே சந்தேகம் கலந்த பயம் வந்தது. நான் அதுகுறித்து பெரிதாக யோசிக்கவில்லை பார்போம்” என்றார் சூரியகுமார் யாதவ்.