Skygain News

ஆல் ஏரியாவிலும் கில்லி என நிரூபித்த சூரியகுமார் யாதவ்..பயிற்சி ஆட்டத்தில் வெறித்தனம்..!

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் தான் சூர்யகுமார் யாதவ். பல ஆண்டுகாலமாக ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலித்து வந்த சூர்யாவிற்கு கடந்த ஆண்டுதான் இந்தியாவிற்காக ஆடும் வாய்ப்பு கிடைத்தது.. அந்த வாய்ப்பை திறன்பட பயன்படுத்தி அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.இதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திற்கு சென்றடைந்த இந்திய வீரர்கள் முதற்கட்ட பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்தனர். டி20 உலகக்கோப்பைக்கு தயாராக இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஆஸ்திரேலிய களம் புதிது என்பதால் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடனும் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்தனர்.அதன்படி இன்று இந்திய அணியும், வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதில் விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்க மற்ற வீரர்கள் களமிறங்கினர்.இத போட்டியில் சூரியகுமார் யாதவ் அரைசதம் விளாசி அசத்தினார். எந்த தயக்கமும் இன்றி அசாதாரணமாக ஆடிய சூர்யகுமார் தற்போது இந்தியாவின் மாம்பிகை நட்சத்திரமாக விளங்கி வருகின்றார்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More