தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியின் மூலம் கவனம் பெற்றார். யார்க்கர் பந்துகளை அசால்டாக போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடராஜன். அவரது அந்த யார்க்கர் தான் அவரை இந்திய அணியின் டெஸ்ட் டீமிலும் ஆடவைத்தது.
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமானார் நடராஜன். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் ஹீரோவாக ஜொலிக்க துவங்கினார்.ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றார் நடராஜன்.
இந்நிலையில் இவருக்கு தற்போது பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவின் பிரபல உள்நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடுவதற்கான தமிழக அணியில் இவர் இடம்பெற்றுள்ளார் இதில் , நடராஜன் முதன்மை வேகப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பை வரும் அக்டோபர் 11ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடரில் விளையாடும் வீரர்களை, பிசிசிஐ தேர்வுக்குழு நேரடியாக கவனிக்கும். எனவே இதில் ஒருவேளை சிறப்பாக விளையாடிவிட்டால் நடராஜன் மீண்டும் இந்திய அணிக்குள் எண்ட்ரி கொடுக்கலாம். எனவே அனைவர்க்கும் பிடித்த வீரரான நடராஜன் சிறப்பாக செயல்படவேண்டுமென ரசிகர்கள் ஆவலாக பார்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.