இன்னும் 4 நாட்களே இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் ஏராளமனோர் தங்கள் ஊருக்கு செல்ல சரியான பயண சீட்டு கிடைக்காமல் அவதி படுகிறார்கள். அதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் இருந்து நெல்லைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் – நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்படுகின்றது. நெல்லை – சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் வரும் 21ம் தேதி நாளை மதியம் 1 மணிக்கு இயக்கப்படுகிறது.