கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தயாரிக்கப்படும் முறை சுகாதாரம் போன்றவற்றை இன்று ஆய்வு செய்தார் மேலும் கோட்டாறு செட்டிகுளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அங்கு குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினார் அவருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் சந்தித்த ஜோதி நிர்மலா கூறியதாவது :
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டேன் இன்று மாணவர்களுக்கு பொங்கல் சாம்பார் தயார் செய்யப்பட்டுள்ளது நானும் அவருடன் அமர்ந்து காலை உணவு அருந்தினேன் மிகச் சிறப்பாக இருந்தது மாணவர்களின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை அளித்த முதல் அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்