சென்னை அடுத்த மேலகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தில் அகில இந்திய மாஸ்டர்ஸ் ரேங்கிங் இறகுபந்து போட்டி நடைபெற்றது. 35 வயது முதல் 75 வயது வரையிலான பல்வேறு பிரிவு போட்டிகளில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு இறகுபந்து கழக தலைவரும் , இந்திய இறகுபந்து கழக துனை தலைவருமான அன்புமனி ராமதாசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழகத்தில் இறகுபந்து போட்டி கிரிகெட் போட்டிக்கு நிகராக வேகமாக வளர்ந்து வருவதாகவும், இதனால் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டு அரங்குகள் அமைத்து ஊக்குவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்ட அவர்,
இறகுபந்து போட்டியின் சர்வதேச போட்டியான (B.W.F) போட்டியை தமிழகத்தில் நடத்தினால் இங்குள்ள போட்டியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
தோடர்ந்து பேசிய அவர், தற்போது ஆர்.எஸ்.வி வைரஸ் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரவுவதால் அவர்களை வெளியில் அழைத்து செல்ல கூடாது என்றும் , பள்ளி மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பன்றிகாய்ச்சல் பரவி வருவதால் பாதிப்பு ஏற்பட்டும் அந்தந்த ஒன்றியம் மற்றும் மண்டலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு தீவிர கண்கானிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
அதேபோல் இன்புலூயன்சா என்பது பொதுவாக ஆண்டுதோரும் வரும் காய்ச்சல் என்பதால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுருத்தினார்.
மேலும் பா.ம.க 2.0 திட்டம் செயல்படுத்தபட்டு வருவதாகவும், காலநிலைமாற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நீர்மேலான்மைக்கு முக்கியதுவம் அளித்து பா.ம.க 2.0 செயல்படுத்தபடுவதாகவும் தெரிவித்த அவர், காலநிலை மாற்றத்தால் ஏற்பட போகும் பாதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.
அதோடு 2026 ல் ஒருமித்த கருத்துகொண்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம் என்றும் 2024 ல் அதற்கான வியூகத்தை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை நிரைவேற்ற வலியுருத்தி மூன்று நாட்கள் மேற்கொண்டு நடைபயணத்திற்கு ஒட்டுமொத்த தருமபுரி மக்களும் ஆதரவளித்ததாகவும், அதுபோல் இந்தியா முழுவதும் ஒருங்கினைக்க தமிழகத்தில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்திற்கும் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.