தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் நிஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் அடுத்த. துரைப்பாக்கம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் முக்கிய கருத்தாக தண்ணீர் எடுக்க உரிமம் புதுப்பித்தல் பற்றி பேசினர்.
நேற்று பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த இரண்டு லாரியை சிறைபிடித்த பல்லாவரம் வட்டாட்சியர் சகுந்தலா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தண்ணீர் எடுக்க வட்டாட்சியரிடம் உரிமம் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உரிமம் வழங்க மனு கொடுத்தும் அதிகாரிகள் உரிமம் கொடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டினர்.
கொரோனாவை தொடந்து கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் எடுக்க லாரிகளுக்கு அனுமதி வழங்கும் உரிமம் கொடுக்கவில்லை தற்பொழுது அனுமதி உரிமம் இல்லாமல் தண்ணீர் எடுத்தால் லாரியை அதிகாரிகள் சிறை பிடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 15 ஆயிரம் தண்ணீர் லாரிகள் உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தண்ணீர் எடுக்க உரிமம் வழங்காததை கண்டித்தும் லாரிகளை சிறைபிடிப்பதை கண்டித்தும் வரும் திங்கட்கிழமையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் நிஜலிங்கம் பேட்டியளித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மால், திரையரங்கு, அடுக்குமாடி குடியிருப்பு, தனியார் மென்பொருள் நிறுவனம், உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறோம். இந்நிலையில் அதிகாரிகள் லாரியை சிறைப்பிடிப்பது, தண்ணீர் எடுக்க உரிமம் வழங்க மறுப்பது போன்றவற்றை கண்டித்தும் தனியார் தண்ணீர் லாரிகள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தியும் இந்த காலைவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.