கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் முன்னிலையில், பொதுப்பணிகள் (கட்டங்கள்) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு அரசு மறுவாழ்வு மையத்தில் மேற்கொள்ள படவேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் தொழு நோயாளிகளின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மற்றும் நேரத்திற்க்கு உணவுகளை தரமாக வழங்கவும் அரசுத் துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின் போது ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிகண்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.