கரூர் எம்.பி.யைக் காணவில்லை.. அவரை கண்டா வரச் சொல்லுங்க என்கிற போஸ்டர் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நடத்தி வரும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தில் பங்கேற்றுள்ள கரூர் எம்.பி.யை காணவில்லை என்கிற போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பரவி செம வைரலாகி வருகிறது.
கரூர் எம்.பி. ஜோதிமணி, காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி நடத்தி வரும் ‘ஜோடா யாத்திரை’யில் அவருடன் அவருக்கு பக்கபலமாய் நின்று வருகிறார் . ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் தனது கட்சியினருடன் நடை பயணம் மேற்கொண்டு பலதரப்பட்டு மக்களை சந்தித்து பலரது மனதை வென்றுவருகிறார் .
தினந்தோறும் அதன் செய்திகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ராகுல்காந்தி நடுரோட்டில் தண்டால் எடுத்தது, சிறுவனுடன் கை கோர்த்து நடந்து சென்றது, சாட்டையால் தன்னை தானே அடித்துக் கொண்டது என பல சுவாரசிய சம்பவங்கள் இந்த யாத்திரையில் அரங்கேறியுள்ளது அவை அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் கரூர் எம்பியான ஜோதிமணியை காணவில்லை என்றும், ” அவரை கண்டா வரச் சொல்லுங்க… கையோடு கூட்டி வாருங்க…” என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி செம வைரலாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சி வட்டாரங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலைகள் ஏற்படுத்துவதுடன் சற்று பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
