உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடம் பிரேசில் பிடித்துள்ளது. இந்த கரும்பு சாறு நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பரிந்துரைப்படுகிறது ,ஏனெனில் இதில் மற்ற பழ சாறுகளை விட சுகர் அளவு மிக குறைவாக உள்ளது . மேலும் இது கல்லீரலுக்கு மிகவும் உகந்தது என்பதால் ,மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக கூட பரிந்துரைக்கப்படுகிறது .மேலும் இதில் உள்ள மற்ற நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

1.வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், புத்துணர்ச்சி கிடைக்கிறது.
2.செரிமான பிரச்சினையுள்ளவர்கள் இதை சாப்பிட்டால் கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
3.சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்சனையுள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை, தேங்காய் தண்ணீரில் கரும்பு சாறு குடித்து வர குணமாகும்.
4.வாய் தூர் நாற்றம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் அதை போக்கும் வலிமை கரும்புச் சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் இது உதவுகிறது.
5.உடல் எடைகூடாமல் வலிமை குன்றி இருப்போர் கரும்புச்சாறை குடித்தால் எடை கூடும் .
6.உடலில் டாக்சின்ஸ் உள்ளவர்கள் இதை குடிக்கலாம் .இந்த கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத டாக்சின்களை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
7.கிட்னியில் எரிச்சல் உள்ளோர் கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்து விடலாம்
8.கரும்பு சாறு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது
9.கரும்பு சாறு ஒருவரை இளமையாக வைத்திருக்கிறது
10.கரும்பு சாறு புற்றுநோயை எதிர்த்துப் போராடி ,கேன்சர் செல்கள் வளராமல் தடுக்கிறது .