உலகப்புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். பாரம்பரியமிக்க விம்பியள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் ஃபெடரர்.
இந்நிலையில் தன் ஓய்வு குறித்து மிகவும் உருக்கமாக ரோஜர் பெடரர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விளையாட்டை பற்றியும் தன் நண்பர்கள், குடுமபத்தினர் பற்றியும் உருக்கமாக பேசி அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் ரோஜர் பெடரர்.
டென்னிஸ் என் வாழ்க்கையில் நினைக்காதது எல்லாம் கொடுத்து இருக்கிறது.நல்ல நண்பர்கள், ரசிகர்கள் என அனைத்தையும் கொடுத்தது இந்த டென்னிஸ் தான். என் வாழ்க்கை பயணத்தில் என்னுடன் இருக்கும் மனைவி மிர்கா மற்றும் என் குழந்தைகளுக்கு நன்றி. சிறு வயதில் டென்னிஸ் பந்தை எடுத்து கொடுக்கும் Ball boy ஆக என்னுடைய பயணத்தை தொடங்கினேன். டென்னிஸ் மீதான ஆர்வத்தால் கடுமையாக உழைத்தேன்.
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
உழைப்பின் பயனாக எனக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றி பல சாதனைகளை படைக்கும் உத்வேகத்தை கொடுத்தது. என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டேன் போன்ற ஒரு மனநிலை கொடுத்து இருக்கிறது. சிரிப்பு, அழுகை, வெற்றி, தோல்வி என அனைத்தையும் இந்த டென்னிஸ் கொடுத்திருக்கிறது. 40 நாடுகளில் விளையாடியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என அவர் கூறியுள்ளார்
To my tennis family and beyond,
— Roger Federer (@rogerfederer) September 15, 2022
With Love,
Roger pic.twitter.com/1UISwK1NIN