‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.மேலும் இந்தப்படத்தில் விஜய் நாற்பது வயதான கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தளபதி 67′ படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கும், சேட்டிலைட் உரிமையை சன் டிவி 80 கோடி ரூபாய்க்கும் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.’
#Thalapathy67 rights
— Rajasekar (@sekartweets) November 24, 2022
Digital Rights – Netflix -160cr
Satellite Rights – Sun TV- 80cr
Total – 240cr
தளபதி 67′ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில் 240 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.