விக்ரம்’ படத்தினை தொடர்ந்து மீண்டும் விஜய்யை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘தளபதி 67’ ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தில் விமர்சனரீதியாக எழுந்த சர்ச்சைகளை சரிகட்ட போவதாகவும், இந்தப்படம் ழுழுக்க தன்னுடைய பாணியில் இருக்க போவதாகவும் லோகேஷ் பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தின் பூஜை இன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய், திரிஷா நடிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Another one 🔥💥#Thalapathy67𓃵 pic.twitter.com/FK89jERvi2
— 𝗕𝗮𝘀𝗶𝘁𝗵✰ᵗʰᵃˡᵃᵖᵃᵗʰʸ (@Basith_Vj0710) December 5, 2022
நேற்றைய தினம் விஜய்யின் ‘தளபதி தீ’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று விஜய்யின் அடுத்த பட பூஜை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.