Skygain News

மிக எளிமையாக நடைபெற்ற அமெரிக்க அதிபரின் பேத்தி திருமணம்..!

உலகில் செல்வாக்கு மிகுந்த நாடாக கருதப்படும் அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக இருப்பவர் ஜோ பைடன் .

ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் மற்றும் முன்னாள் மனைவி கேத்தலின் புலேவுக்கு பிறந்தவர் 28 வயதான நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 28 வயதான நவோமி பைடன், 24 வயதான சட்டகல்லூரி மாணவன் பீட்டர் நில்லுவை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குடும்பத்தினர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து திருணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் மிக எளிமையான முறையில் நடந்தது. அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

அதிபரின் குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும். அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும். இதுவரை அமெரிக்க வெள்ளை மாளிகையில், 19 திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.