தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார் பட்டி ரஹ்மத் நகரை சேர்ந்தவர் முஸ்தபா . இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 9 தேதி அன்று முஸ்தபா முதலியார் பெட்டியில் இருந்து பொட்டல்புதூருக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் .
ஆட்டோ முதலியார்பட்டி அருகே வந்தபோது எதிரே ஸ்டீபன் உள்ளிட்ட ஐந்து பேர் இனோவா காரில் திருச்செந்தூரில் இருந்து குற்றாலம் திரும்பும் போது ஆட்டோவை அடித்து தூக்கி விபத்துக்குள்ளாகியது. இதில் ஆட்டோ ஓட்டுனர் முஸ்தபாவிற்கு வலது கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனோவா கார் ஓட்டி வந்த ஸ்டீபன் மீது கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . இன்னோவா கார் விபத்துக்குள்ளான போது அதில் ஏர்பேக் ஓபன் ஆனதால் காரில் இருந்தவர்களுக்கு எந்த ஒரு காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.