ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் மீது புதிதாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார் .
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே புதிதாக ஆத்தூர் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
அமலாக்கத்துறை யார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். அதிகாரம் வைத்துள்ளவர்கள் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் மூலம் சரியான தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவைகள் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அசால்ட்டாக கூறிவிட்டார் .
ஆனால் மக்கள் வெறும் தக்காளி வெங்காயம் மட்டும் வைத்து எப்படி உணவு உண்பார்கள் . சமயல் என்னை விலை உயர்வு சமயல் காஸ் விலை உயர்வு , இப்படியே போனால் ஏழை எளிய மக்கள் எப்படி வாழ்வார்கள் ஆகையால் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் மீது புதிதாக உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தினார் .