மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு இந்த சந்திப்பு நடந்தால், மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை, குறிப்பாக 100 நாள் வேலைத்திட்ட நிலுவையை உடனடியாக வழங்க பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் கங்கை நதியரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுப்பார் என்றும் அவர்கள் கூறினர்.