காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் தனியார் பள்ளியில் இந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது.
தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி மெய்ய நாதன் கலந்துகொண்டு மாணவர்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாணவர்களிடையே உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் இந்தியாவில் மெத்தம் 76 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர் அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 26 பேர் ஆகையால் இந்தியாவின் செஸ் தலைநகர் சென்னை தான்..
ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் விளையாட்டில் சாதனை படைத்த தமிழக விளையாட்டு வீரர்கள் 1433பேர் 40.89 கேடி வரை ரொக்க பரிசு வழங்கி தமிழக முதல்வர் ஊக்கப்படுத்தி, கௌரவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையில் சாதிக்க நினைக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆண்டுதோறும் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராக வரும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 25 லட்சம் நிதியிலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்த முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். இந்தியாவில் விளையாட்டின் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்..