தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் என்ற இளைஞரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோரின் பேச்சை கேட்ட அந்த இளம் பெண் தனது காதலனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறார் .
கடந்த ஐந்தாம் தேதி காதலியை செல்போனில் அழைத்த காதலன், ஐந்து வருடங்களாக காதலித்து விட்டு இப்படி திடீர் என்று பேசாமல் இருப்பது சரியா என்று கேட்டிருக்கிறார். பெற்றோர் பேச்சை என்னால் மீற முடியாது என்று அந்த இளம் பெண் உறுதியாக சொல்லவும், சரி, கடைசியாக ஒருமுறை மட்டும் வந்து என்னை சந்தித்து பேசிவிட்டு போ என்று அழைத்திருக்கிறான். அவன் பேச்சை நம்பி அந்த இளம்பெண் காதலன் ஸ்ரீசைலம் காண சென்றிருக்கிறார் .
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதும் காதலித்து விட்டு ஏமாற்றி விட்டு செல்கிறாயே உன்னை சும்மா விடுவேனா என்று மிரட்டி, அந்த பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார் அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அந்த பெண், இத்தனை வருடம் காதலித்த நீ இப்படி செய்து விட்டாயே என்று அழுது புலம்பி இருக்கிறார் .

நீ நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், உன்னை சும்மா விடமாட்டேன் இப்போதே போலீசுக்கு போன் செய்து உன்னை கைது செய்ய வைக்கிறேன் என்று போலீசுக்கு போன் செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம் காதலியை அருகில் உள்ள கல்லை எடுத்து அடித்து பிறகு துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொண்டிருக்கிறான். அதன் பின்னர் தனது உறவினர் சிவா என்பவரை அழைத்து அவரின் உதவியுடன் கால்வாயில் குழி தோண்டி அங்கேயே காதலியை புதைத்து விட்டு தலைமறைவு ஆகினான்.
இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பெற்றோர் தேடத் தொடங்கி இருக்கிறார்கள் . இந்நிலையில் காதலனை காண செல்கிறேன் என்று மாணவி அனுப்பிய குறுந்தகவல் பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது. இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசில் புகார் அளிக்க, போலீசார் ஸ்ரீசைலம் மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி கொண்டிருந்த போது தான் , காட்டுப்பகுதியில் தனது நண்பருடன் பதுங்கி இருந்த தகவல் தெரிய வந்தது பின்னர் அவர்களை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காதலியை கொலை செய்து புதைத்ததை ஒப்பு கொண்டிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதைக்கப்பட்ட அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் தோன்றி எடுத்துள்ளனர். ஸ்ரீசைலம், உதவியாக இருந்த சிவாவையும் போலீசார் கைது சிறையில் அடைத்து உள்ளனர்.