அரகண்டநல்லூர் அருகே தாயை மகனே கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வி. சித்தாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் குப்பைகளை அகற்றும் கூலி வேலையை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் 75 வயதான சக்திவேலுக்கும் அவரது தாயார் யசோதைககும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது .இதே போல் சக்திவேல் மனைவி செல்விக்கும், தாயார் யசோதைக்கும் தகராறு ஏற்படவே, அங்கு குடிபோதையில் வந்த சக்திவேல் தாயை அடித்து வீட்டின் பின்பக்கத்தில் உள்ள இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.
இந்த செய்தி காட்டுத்தீபோல் பரவ, அரகண்டநல்லூர் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புதைக்கப்பட்ட யசோதை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சக்திவேலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.