காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து காண மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. மேட்டூர் அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை மேட்டூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் போக்கியாக 16 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சேலம் ,ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு ,நாமக்கல், கரூர், திருச்சி ,தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை ,நாகப்பட்டினம் ,கடலூர் ,திருவாரூர் ,மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.