ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அரசு தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலை சிற்றுண்டி உணவு சமைக்கும் இடத்தினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலை சிற்றுண்டி உணவு சமையல் முறைகளை ஆட்சியர் பார்வையிட்டு பின்பு குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய உணவினை உட்கொண்டு சுவை மற்றும் தரத்தை பரிசோதனை செய்தார்.
தொடர்ந்து அரசு ஆரம்ப துவக்க பள்ளிகளுக்கு நேரில் சென்ற ஆட்சியர் குழந்தைகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி உணவினை சாப்பிட்டு குழந்தைகளுடன் உரையாடல் நடத்தி வழங்கப்படும் உணவின் சுவையை குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார் பின்னர் குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய காலை உணவினை தரமாகவும் சுவையாகவும் தொடர்ந்து வழங்க வேண்டும் என சமையல் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்..