Skygain News

ஏடிஎம் இயந்திரத்தை அபேஸ் செய்ய முயன்ற போதை ஆசாமிகள்..! திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள்…

சென்னை தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் எடுக்கும் இயந்திரத்தை நேற்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர் .

அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் டெல்லியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு எச்சரிக்கை தகவல் சென்றுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த வங்கி ஊழியர்கள் இது குறித்து உடனடியாக தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாமல் கையில் சுத்தி மற்றும் உளி ஆகிய பொருட்களுடன் நடந்து சென்ற நான்கு பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சீர்காழியை சேர்ந்த ராஜேஷ்குமார், பொத்தேரி பகுதியைச் சேர்ந்த அன்பழகன், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மணிகண்டன் ,சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என தெரியவந்தது.

மேலும் நான்கு பேரும் கஞ்சாவை புகைத்து விட்டு மீண்டும் நாளை கஞ்சா வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளை மூயற்ச்சில் ஈடுபட்டது தெரியவந்தது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More