பூமியில் பிறந்த அனைவருக்கும் பொதுவாக பிடிக்கும் ஒரே விஷயம் எது என்றால் அது காதல் தான் . இந்த காதலில் சிக்காதவர்கள் யாரும் கிடையாது. மாவீர் , கோழை , நல்லவர், கெட்டவர் , ஏழை , பணக்காரரும் கூட ஏதாவது ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டு அவருக்காக எதையும் செய்ய தயாராக இருப்பர்.
அந்த வகையில் பெரும் பணக்கார இளம்பெண் ஒருவர் கார் ஓட்ட பயிற்சி மேற்கொண்ட போது பயிற்சியாளரின் கியர் போடும் ஸ்டைலால் மிகவும் கவரப்பட்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
பெரும் பணக்கார வீட்டு இளம்பெண் ஒருவர் கார் ஓட்ட ஆசைப்பட்டு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பயிற்சியாளர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக் கொடுத்தார். அப்போது காரில் கியர் மாற்றுவதை பார்த்து ஈர்க்கப்பட்ட அந்த இளம்பெண் பயிற்சியாளர் மீது காதல் வசப்பட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தனது காதல் குறித்து இளம்பெண் பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் வாங்கியுள்ளார். தற்போது இந்த காதல் ஜோடி திருமணத்தில் ஒன்று சேர்ந்துள்ளது. இந்த தம்பதி தங்களின் காதல் மற்றும் திருமணம் குறித்து ‘டெய்லி பாகிஸ்தான்’ என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்தனர். அப்போது இளம்பெண் கூறும்போது, ‘‘அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. காரில் கியர் போடும் போது அவரது வேகமாக செயல்படுவார்’ என்று வெட்கத்துடன் கூறினார்.