கடந்த மாதம் அக்டோபர் 17 திங்கள்கிழமை அன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்தலுக்கான தேர்தலில் மொத்தம் 68 பூத்துகளில் நடைபெற்ற இத்தேர்தலில் 9915 வாக்காளர்களில் 9,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது போக அதே கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே வாக்காளர்களுக்கு சமமாக போட்டியிட்டுள்ளார்.

எனவே இதை பற்றி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், மிக சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற்ற இந்த தேர்தலில் 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் நடைபெற்ற 68 வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் நேற்று தலைநகரில் டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு பணி தொடங்குகிறது.

வேட்பாளர்கள் சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜூன் கார்கேவின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என தகவல். சில மணி நேரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆக, 24 ஆண்டுகளில் முதல் முறையாக காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அது மல்லிகார்ஜூன் கார்கேவா வா இல்லை சசி தரூர் என்பது இன்று தெரிந்துவிடும். மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்.