தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முத்தையாபிள்ளை என்பவர் கமிஷன் கடை நடத்தி வருகிறார். இவர் மிளகாய் வற்றல், பருத்தி, கடலை உள்ளிட்ட விவசாய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்துவருகிறார். முத்தையா பிள்ளையிடம் பணி செய்து வருபவர்கள் செல்வம்( 28 ) ஜோதி ரமேஷ் (25) இருவரும் தரம் பிரிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சங்கரன் கோவில் வந்து முதலாளியிடம் ஒப்படைப்பது வழக்கம்.
நாளடைவில் முத்தையாபிள்ளையின் நம்பிக்கையை பெற்ற இருவரும் ஏற்றுமதி செய்துவிட்டு லட்சக்கணக்கில் பணத்தைகொண்டு வருவது வாடிக்கையான நிலையில், செல்வத்திற்கு செய்யது அலி (38 )என்பவரிடம் அறிமுகமாகி அவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் போது சையத் அலி கூறிய யோசனையில் பணத்தை எடுத்து வா பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என ஆசை காட்டியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரைக்குச் சென்று பொருட்களை இறக்குமதி செய்துவிட்டு 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சங்கரன்கோவில் எடுத்து வந்துள்ளனர். அதை முத்தையா பிள்ளை இடம் ஒப்படைக்காமல் செல்போன்களை சுச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதையடுத்து சுப்பையா பிள்ளை சங்கரன்கோவில் நகர காவல் துறையில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் செல்வம், ஜோதி ரமேஷ், சையது அலி, சித்ரா, கிருஷ்ணசாமி, தன்ராஜ், சபாபதி, வன்னிய ராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை மீட்டனர்.