சீனாவின் ஜெஜியாங் நகரில் வசித்து வருபவர் 39 வயதான ‘லூ’. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமைப்பதற்காக வெளியில் சென்று நண்டு வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த நண்டுகள் சில உயிருடன் இருந்துள்ளன. இதனை கண்ட லூவின் மகள் உயிருடன் இருந்த நண்டுகளுடன் விளையாடியுள்ளார். அப்போது ஒரு நண்டு லூவின் மகளை கடித்துவிட்டது. எனது மகளையே நீ கடிக்கிறாயா என ஆத்திரம் அடைந்த லூ, மகளை கடித்த நண்டை கையில் எடுத்து அதனை தனது வாயால் கடித்து உயிருடன் சாப்பிட்டுள்ளார். இந்நிலையில், லூவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவரை சந்தித்த நிலையில், மருத்துவர்கள் லூவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், லூ நண்டை உயிருடன் கடித்து சாப்பிட்டதை அவரது மனைவி மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு ரத்த பரிசோதனைகள் செய்த பார்த்த போது, அவர் மூன்று விதமான பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், கடந்த வாரம் லூ குணமடைந்து வீடு திரும்பினார்.
