தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நடிப்பிலும் சொந்த வாழ்க்கையிலும் இன்று வரை அவர் வெற்றிகரமாக வலம் வர முக்கிய காரணம் ஆன்மீகம் தான் , இதனை பல மேடைகளில் அவர் கூற நாம் கேட்டிருப்போம் .
எப்போதும் சீராக இருக்க மனிதன் கடைசியாக செல்லும் இடம் ஆன்மீகம்,அதனை தனது நாற்பதுகளில் தேர்ந்தெடுத்த நமது சூப்பர் ஸ்டார்,பின் நாட்களில் அதனை பகிரங்கமாக வெளிபடுத்தினார். வீட்டுக்குள் பக்தியும்,ஆன்மீகத்தை மனதிலும் வைத்து வெளியில் வேறு வேஷம் போடுபவர்கள் மத்தியில்.இவர் வெளிபடையாக தன்னை ஆன்மீகவாதி என்றே காட்டிக்கொண்டார் .

இதில் வியக்க வைக்கும் செய்தி என்னவென்றால் உலகிற்க்கு இப்படி ஒரு சக்சஸ் ஃபார்மூலாவை அறிமுகபடுத்திய நமது சூப்பர் ஸ்டார் , தனது மனநிலை நிம்மதியாக இல்லை என அண்மையில் அவர் கூற அதை பற்றிக்கொண்டு பலர் அவரை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர் .
ஒரு ஆன்மீகவாதியின் வாழ்க்கையில் நிம்மதியில்லை என்றால் இதனை எவ்வாறு நாம் அனுகுவது,உங்களுக்கே இந்த நிலமை என்றால் சராசரி மனிதரான நாங்கள் எல்லாம் என்ன நிலையில் இருப்போம் என சிலர் மனதில் எழும் குழப்பங்களை கேள்விகளாக முன்வைத்தும் வருகின்றனர் .
இவர் அனைத்து மேடைகளிலும் குட்டி கதை சொல்லும் போதே அவரின் ஆன்மீக தேடலை நாம் உணரலாம் இவை அனைத்தும் அறிந்த ஓர் ஆன்மீகவாதி நிம்மதியின்மை பற்றி பேசுவது ஆக சிறந்த விழிபுணர்வு வாசகம்,இவை அனைத்தும் கற்றாலும் இந்த மனித துண்பத்தில் இருந்து விடுபடுவது சாதரனமில்லை என்பதை நமக்கு உணர்த்திக்கிறது.
மறுபக்கம் மனம் என்னும் மிக பெரிய கொடியவனிடம் தினம் தினம் நாம் சிக்கி தவிப்பது காலங்கள் கடந்த நிகழ்வு ஆனால் இதனை அறியாதவர் இல்லை சூப்பர் ஸ்டார். இது இந்த மனித குலத்தின் பிரச்னை , மனிதனுக்கும் அவன் ஆழ்மனதுக்கும் நடக்கும் துயர போராடத்தில் தலைவா நீங்கள் மட்டும் விதிவிலக்கா இதற்க்கு யாரை குறை சொல்வது. நிம்மதி வெளியே தேட வேண்டிய விஷயம் இல்லை நமக்கு உள்ளே பார்க்க வேண்டிய விஷயம் .

உங்கள் மீது படையெடுக்கும் விமர்சனங்களுக்கு பதில் இல்லை இது உன்மையும் கூட . ஆனால் ஆறறிவு கொண்ட நாம் சிந்திக்க வேண்டும் , மனிதர்களாய் பிறந்த நமக்கு காலத்திக்கேற்ப பல இன்ப, துன்பங்கள் வந்து செல்லும் , இருப்பினும் இந்த உலகில் அனைவரும் நிம்மதியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறியே..
வாழ்க்கையில் எத்தனையோ சமயங்களில் நம்மை மீறி நடக்கும் பல சம்பவங்களை ஒருநிலையோடு நாம் எவ்வாறு கையாள்கிறோமோ அதுவே ஆன்மீகம் , பிறருக்கு எந்த சூழ்நிலையிலும் எந்த வித தீங்கும் நினைக்காமலும் , செய்யாமலும் இருக்க உந்துசக்தியாக இருப்பதே ஆன்மீகம்.