புகழ்பெற்ற ஆங்கில நாவல் ஹாரிபாட்டர் மொத்தம் ஏழு புத்தகங்களாக வெளிவந்த ஹாரிபாட்டர் 8 பாகங்களாக கொண்டு திரைப்படமாக வெளிவந்தது. ஹாரிபாட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த ஹரிபாட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி. 72 வயதான ரூபி காலட்ரனி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ரூபி கால்ட்ரனி இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஹரிபார்ட்டர் திரைப்படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்த ரூபி கால்ட்ரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.