Skygain News

வெற்றியயை கொண்டாடும் விதமாக குத்தாட்டம் போட்ட இந்திய அணி வீரர்கள் – வைரலாகி வரும் வீடியோ.!

ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சர்வதேச போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். அவர் 97 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதேபோல் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான் அவரது பங்கிற்கு அரைசதம் விளாசினார். இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் வெற்றியயை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/ChkXuF0j1-l/?utm_source=ig_embed&ig_rid=c12e4b1c-80b1-4f02-80fb-cc71029214df

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.