கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இன்று ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் .
மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதில் ஏராளமான அரசியல் கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையிலும் இவர்கள் கோரிக்கையில் பேச்சுவார்த்தை உடன்பாடு இன்னும் வராததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் இன்றும் இவர்கள் போராட்டம் சுங்கச்சாவடி எதிரே நடைபெற்று வருகிறது இதனால் சுங்க கட்டணம் பாஸ்ட் ட்ராக் முறையில் தானியங்கி மூலம் நடைபெற்று வருகிறது மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன