கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி கிராமத்தில் சென்னை-திருச்சி நான்கு வழி சாலையில் கடந்த 13 ஆண்டுகளாக இயங்கி வரும் சுங்கச்சாவடியில் பணி செய்து வந்த 28 ஊழியர்களை சுங்கச்சாவடி நிர்வாகம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 18 வது நாளான இன்று கண்ணில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் தீவிரமடியும் இந்த சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் .