ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் ஜம்மு- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வந்துகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 13 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு. மேலும்,17 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களை மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சம்பா மாவட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவர் பாரத் பூஷன் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கார் கட்டுப்பாட்டை இழந்து செனாப் பகுதியில் கவிழ்ந்ததில் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டு புடிக்க இந்திய ராணுவமும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தோடா மற்றும் சம்பாவில் துரதிர்ஷ்டவசமான சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது” என்றார்.