விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரிலீசான இந்தி திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’இந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான முதல் படமும் இதுதான். வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 350 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து சாதனை படைத்தது.
பிரதமர் மோடியும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை வியந்து பாராட்டினார். அதேபோல் பாலிவுட் பிரபலங்களும் இப்படத்தை புகழ்ந்து பேசினர்.இந்நிலையில் இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து நடுவர் இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நாதவ் லபிட் கடுமையாக விமர்சித்தார்.
Chair of the Jury of Goa Film Festival says that the Jury felt that Kashmir Files was a vulgar propaganda film, inappropriate for the film festival pic.twitter.com/FKTF93ZlRY
— Prashant Bhushan (@pbhushan1) November 28, 2022
அவர் கூறியதாவது ,. இது மோசமான பிரச்சார தன்மை கொண்டது. இது நாகரீகமற்ற திரைப்படம் என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த விழாவில் இதுபோன்ற படங்களை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.