ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கர்சிங் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற இடத்தில் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும், மூன்று மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மூன்று குழந்தைகள் அப்பகுதியில் உள்ள சாரதா பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர். கங்கர்சிங் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வியாபார நிமித்தமாக சுற்றுலா சென்று ஊர் திரும்பினார். சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்கி வந்த சாக்லேட் கொடுத்துள்ளார்.

இவர்களில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் சந்தீப் (8) பள்ளிக்கு செல்லும் போது சாக்லேட்டை கொண்டு சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற சில மணி நேரம் கழித்து அந்த சாக்லேட் வாயில் போட்டு சாப்பிட்டுள்ளார். அதில் சாக்லேட் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி கீழே விழுந்தார். இதை கவனித்த பள்ளி ஊழியர்கள் அவரது தந்தைக்கு உடனடியாக தகவல் அளித்துள்ளார். உடனடியாக சந்தீப்பை வாரங்கல் எம்ஜிஎம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் சோதித்ததில் அவரது தொண்டையில் சாக்லேட்டை சிக்கி இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்குள் சந்தீப் உயிரிழுந்தார். இதனால் சந்தீப்பின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆசையாக வாங்கி வந்த சாக்லேட் தனது மகனின் உயிரை பறித்த கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.