அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி ‘நவோமி பைடன்’. இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது. அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதிபர் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக அதிபர் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.